“ஆறு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற்றது வரலாற்றுச் சாதனை” - முதல்வர் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது வரலாற்றுச் சாதனை என்றும், அனுமதி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Advertisement

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ கல்லூரிகளுக்காக ஆயிரத்து 950 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டுக்கு‌ மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், அதில் மத்திய அரசின் பங்காக ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்க அனுமதி தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


Advertisement

ஆறு மருத்துவ கல்லூரிகளுக்காக தமிழக அரசின் பங்காக 780 கோடி ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ள முதலமைச்சர், தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது வரலாற்றுச் சாதனை என்றும், அனுமதி அளித்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement