10 பைசா நாணயத்திற்கு ரூ.150 மதிப்புள்ள டி-சர்ட் - அலைமோதிய கூட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல்லில் தனியார் துணிக்கடையில் பழைய பத்து பைசா நாணயத்திற்கு ரூபாய் 150 மதிப்புள்ள டி-சர்ட் வழங்கப்பட்டது.


Advertisement

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பழைய நாணயங்களை மீண்டும் மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் வகையில், 5 பைசா 10 பைசா நாணயங்களுக்கு சாப்பாடு, துணிகள் வழங்கி திண்டுக்கல்லில் பிரபலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பிரியாணி கடையில், பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 


Advertisement

இதேபோன்று இன்று திண்டுக்கல் சந்து கடை பகுதியில் உள்ள சவுண்டம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஒரு தனியார் துணிக்கடையில், பழைய பத்து பைசா நாணயத்திற்கு ரூபாய் 150 மதிப்பிலான டி-ஷர்ட் வழங்கப்பட்டது, இதனால் இன்று அதிகாலை முதலே 500க்கும் மேற்பட்டோர் அந்த துணிக்கடை முன்பு குவியத் தொடங்கினர்.

நீண்ட வரிசையில் நின்றிருந்த 200 பொதுமக்களுக்கு கடை சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் அமீன் பேசுகையில், பழைய நினைவுகளை புதுப்பிக்கும் முயற்சியாக டி-ஷர்ட்டை 10 பைசாவிற்கு வழங்குவதாக தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement