போலி தங்க நகையை அடமானம் வைத்து வங்கியை ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் ஐடிபிஐ வங்கியில் கடந்த வருடம் 122 கிராம் தங்க வளையலை அடமானம் வைத்துள்ளார். நகையை சோதனை செய்த பின்னரே 2.15 லட்ச ரூபாயை வங்கி அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.
நகையை அடமானம் வைத்து பணத்தை பெற்றுச் சென்ற ரவி வட்டியும் செலுத்தவில்லை, நகையையும் மீட்கவில்லை எனத் தெரிகிறது. நகைக்கு வட்டி செலுத்தாததால் முறைப்படி வங்கியில் இருந்து நோட்டிசும் அனுப்பப்பட்டது. ரவி தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் நகையை பொது ஏலத்தில் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது.
அப்போது நகையை சோதித்த வங்கி அதிகாரிகள் நகை போலியானது எனக் கண்டறிந்தனர். அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகிகள் இதுகுறித்து மேலாளரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து வங்கி மேலாளர் அன்பழகன் அளித்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நகை அடமான விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்