[X] Close >

போலீசிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

rowdy-death-in-kanjipuram

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கைது செய்ய போலீசார் விரட்டிச் செல்லும் பொழுது கிணற்றில் விழுந்து அவர் உயிரிழந்தார்.


Advertisement

சிவகாசியை சேர்ந்தவர் ரவுடி பாட்டில் மணி. மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம், சென்னை செங்குன்றம் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது கொலை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. இதனால் போலீசார் இவரை தெடி வந்தனர். 

இந்நிலையில், ரவுடி பாட்டில் மணி, மற்றும் அவனது கூட்டாளிகள் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கி இருப்பதாக சென்னை செங்குன்றம் சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


Advertisement

இதையடுத்து தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் தனிப்படையினர் பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர். அப்போது பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதில் எதிர்பாராதவிதமாக பாட்டில்மணி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த தூசி காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் தீயணைப்புறையினர் உதவியோடு பாட்டில் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close