பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், அரசு அனுமதி அளித்தால் மட்டுமே சிறப்பு காட்சி திரையிடப்படும் என்று கூறினார். மேலும் சிறப்புக்காட்சி தொடர்பாக அமைச்சரை நேரில் சந்திக்கவிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.
முன்னதாக இது தொடர்பாக பேட்டியளித்த கடம்பூர் ராஜூ, தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார். அதை மீறி சிறப்பு காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது என்றும் கூறினார். மேலும், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Loading More post
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?