[X] Close >

ஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு!

Marathi-actress-Pooja-Zunjar-dies-after-delivery

ஆம்புலன்ஸ் வர தாமதமானதை அடுத்து மராத்தி நடிகை உயிரிழந்தார். அவர் பிரசவித்த குழந்தையும் இறந்தது.


Advertisement

பிரபல மராத்தி ஹீரோயின் பூஜா ஸுஞ்சார். வயது 25. இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், தனது சொந்த ஊரான, மகாராஷ்ட்ரா மாநிலம் ஹிங்கோலியில் இருந்தார். அவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கோரேகானில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குப் பிறந்த குழந்தை, சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது. 


Advertisement

அடுத்த சில நிமிடங்களில் பூஜாவின் உடல் நிலையும் மோசமானது. உடனடியாக, ஹிங்கோலி சிவில் ஹெல்த் சென்டருக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு அவரது உறவினர்கள் காத்திருந்தனர்.  கிடைக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரமாகக் காத்திருந்த பின் ஆம்புலன்ஸ் கிடைத்தது. அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ’ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைத்திருந்தால் பூஜா பிழைத்திருப்பார்’ என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close