மகனுக்கு இசையமைக்க கற்றுத் தந்த ரஹ்மான் - யூடியூப் அப்டேட்ஸ் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஏ.ஆ.ரஹ்மான் தன் மகனுடன் இணைந்து யூடியூப்பில் இசையமைக்கும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 


Advertisement

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பிகில்’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ரஹ்மான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடி இருந்தார். ‘வெறித்தனம்’ என்ற அந்தப் பாடல் இன்றைய இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. 

விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’, ‘சர்கார்’, ‘பிகில்’ என மூன்று படங்களுக்குமே ரஹ்மான்தான் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இந்தக் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாக இன்றைய திரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 


Advertisement

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மகன் அமீனுடன் இணைந்து இசை‌யமைக்கும்‌ வீடியோ ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அமீனின் கைகளைப் பிடித்து கற்றுக் கொடுப்பது போன்று வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அடர்ந்த இருட்டில் இருவரும் உட்கார்ந்து வித்தியாசமான மேற்கத்திய இசைக்கருவிகளுடன் இசைக்கும் வீடியோவுக்கு ரஹ்மானின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement