வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வட தமிழகம், தெற்கு ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

ஏற்கெனவே அரபிக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான ஆந்திராவில் கடல் சீற்றமிருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement