போராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊதிய உயர்வுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Advertisement

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி- 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு வீரர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதை நேற்று அறிவித்துள்ளனர். இதனால் அந்த அணி இந்தியாவிற்கு வந்து விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Advertisement

இந்நிலையில் இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் புதிய தலைவராகத் தேர்வாக உள்ள கங்குலி கூறும்போது, ‘’இது தொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம். கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பங்கேற்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்க இருக்கிறோம்’ என்றார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement