நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் அடங்கிய 113 கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூக மக்கள், பருத்திகோட்டை நாட்டார் சங்கத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை தீராததால், போராட்டம் தொடர்கிறது. இதன் தொடர்ச்சியாக 113 கிராமங்களைச் சேர்ந்த, ஒரு சமுதாய மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் ஓட்டுகள் மொத்தமாக சுமார் 57 ஆயிரத்திற்கு மேல் என்பதால் இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்து வருகின்றனர். இதன் காரணமாக உன்னகுளம், மூலைகரைதட்டி, சிங்கநேரி, பருத்தநாதபுரம் உள்ளிட்ட 15 வாக்குச்சாவடிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!