[X] Close >

புதுச்சேரியிலும் மதுக்கடைக்கு எதிர்ப்பு.... தீ வைத்து எரித்த பொதுமக்கள்

pondicherry-tasmac-protest

புதுச்சேரியில் மதுக்கடை மற்றும் சாராயக்கடையை சூறையாடிய பொதுமக்கள் அவற்றை தீ வைத்து எரித்தனர்.


Advertisement

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்குள் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது.. இதனையடுத்து தமிழகத்தில் 3,500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக ஊருக்குள் கடையை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம், கடலூர் மாவட்ட எல்லையையொட்டியுள்ள சோரியாங்குப்பத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை சூறையாடினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காவல்துறையினரின் பேச்சு பலனளிக்காத நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுக்கடைகள் மீது கற்களை வீசினர். மேலும் மதுபானக் கூடத்திற்கும் தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புதுச்சேரி போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close