தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை

Bhavanisagar-Dam-Water-level-reaches-100-feet

தொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம், ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியுள்ளது. 


Advertisement

காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 148 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகரில், 2018 நவம்பருக்குப் பிறகு தற்போது நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணையில், நீர்மட்டம் 102 அடியை எட்டியவுடன் உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Advertisement

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement