சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும் அபாயம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பன்னாட்டு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சாலை விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் உள்ளன.


Advertisement

Image result for sriperumbudur sipcot

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை தொழில் பூங்காவிற்குள் மட்டும் இரவு நேரத்தில் சுமார் 500 மாடுகள் ஆங்காங்கே உலாவுகின்றன. சாலையோர நடைமேடையிலும் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளின் நடமாட்டம் காணப்படுகின்றன. நடைமேடையில் மாடுகள் சாணமிட்டுச் செல்வதால் தொழிலாளிகள் நடைமேடையில் நடக்கவோ, அதன் ஓரத்தில் உள்ள இருக்கையில் அமரவோ முடியாமல் அவதிப்படுகின்றனர். 


Advertisement

மாடு வளர்ப்போர் காலையில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, மாலையில் மீண்டும் கொண்டுவந்து கட்டிப்போடுவதற்கு முன் வருவதில்லை. சிப்காட் பகுதி சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. இருள் சூழந்த பகுதியில் நிற்கும் மாடு, தெரியாமல், வாகன ஓட்டிகள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.இதுவொருபுறமிருக்க, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கனரக வாகனங்களில் அடிபட்டு கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. 

கால்நடைகளால் விபத்து ஏற்படும்போது ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை விடுவதும்,பின்னர் ஓரிரு நாள்களில் கால்நடைகள் மீண்டும் சாலைகளில் சுற்றித் திரிவதும் தொடர்கிறது. எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கால்நடை வளர்ப்போரிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதையும் மீறி கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுவோருக்கு  அதிக அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதைக் கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement