திரையுலகம் மூலம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பிரபலப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளதாக பாலிவுட் நடிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர் திரைத்துறையினர் முன் கலந்துரையாடிய மோடி, படைப்பாற்றலின் சக்தி மகத்தானது என்றும், மகாத்மா காந்தியின் கொள்கைகளை பிரபலப்படுத்தும் வகையில் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் போன்றவை பெரும் பணிகளை செய்து வருவதாகவும் கூறினார். எளிமைக்கு பாத்திரமான காந்தியின் எண்ணங்கள் தொலைத்தூரத்திலும் எதிரொலிப்பதாக மோடி தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் தண்டியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு மோடி கேட்டுக் கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, திரையுலக பிரபலங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
காந்தி பற்றிய விழிப்புணர்வுகளைப் பரப்புவதில் கலைஞர்களின் பங்கு குறித்து மோடி தங்களிடம் கலந்துரையாடியதற்கு நன்றி என நடிகர் ஷாருக்கான் டிவீட் செய்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’