இந்தியா பேட்டிங் ! டாஸ் வென்றார் கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்படவுள்ள 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்யவுள்ளது. ராஞ்சியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.


Advertisement

Image result for kohli faf du plessis toss

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.


Advertisement

Image result for kohli faf du plessis toss

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கும். இந்தப் போட்டியிலும் வென்று தென்னாப்பிரிக் காவை வொயிட் வாஷ் செய்ய இந்திய அணி வீரர்கள் முயற்சிப்பார்கள். விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது, வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement