‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கணவரை காப்பாற்ற வந்த மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.


Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி பகுதியில் வசித்து வந்த வெள்ளைச்சாமிக்கும் அதே பகுதியில் வசித்தும் வரும் அழகுராஜ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அழகுராஜ் வெள்ளைச்சாமியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெள்ளைச்சாமியை குத்த முயன்றுள்ளார்.

இதனைகண்ட வெள்ளைச்சாமியின் மனைவி சண்முகத்தாய் ஓடிவந்து கணவரை காப்பாற்ற முயன்ற போது, அழகுராஜ் சண்முகதாயை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சண்முகத்தாய் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர், படுகாயமடைந்த சண்முகத்தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பந்தமான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


Advertisement

         

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, குற்றம்சாட்டப்பட்ட அழகுராஜ்க்கு இரட்டை ஆயுள்  தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement