“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து-இஸ்லாமியர் என்று பேதம் பார்க்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  


Advertisement

மகாராஷ்டிராவில் இருக்கும் 288 தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிரா பார்லி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மோடி, ‘காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசும் போது காஷ்மீரில் இந்துக்கள் அதிகப் பெரும்பான்மையுடன் இருந்திருந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்திருப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் ஒறுமைப்பாட்டில் இந்து-இஸ்லாமியர் என்று பேதம் பார்க்கக்கூடாது, இதுபோன்ற செயல்களில் பாஜக அரசு என்றும் ஈடுபடாது’ என கூறினார்.


Advertisement

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் நாடு அழிந்துபோகும் என காங்கிரசைச் சேர்ந்து ஒருவர் தெரிவித்திருந்தார் எனக் கூறிய மோடி, 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் எதுவும் நடக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். யாரேனும் காஷ்மீருக்குச் செல்ல விரும்பினால் நானே ஏற்பாடு செய்து தருகிறேன் எனவும் மோடி கூறினார். 

மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏளனமாக பேசியவர்களை வரலாறு குறித்துக்கொள்ளும் எனவும் தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது மோடி பேசினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement