அதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுகவின் 48ஆவது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


Advertisement

அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்தியலிங்கம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமியும் இணைந்து அதிமுக கொடியை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து இருவரும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இரண்டு தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், பெரும்பாலான அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் பங்கேற்க வில்லை.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement