இரண்டரை ஏக்கர் தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்றும் பணியில் இறங்கியுள்ளார் பொறியியல் படித்த பட்டதாரி பெண் குறிஞ்சிமலர்.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சபாபதி- தேன்மொழி தம்பதியினரின் ஒரே மகள் குறிஞ்சிமலர். கடந்த 2018-ம் ஆண்டு இவர் பொறியியல் படிப்பை முடித்தார். சென்னைக்கு வேலைக்கு சென்ற குறிஞ்சிமலர், பணியில் திருப்தி இல்லாததால் சொந்த ஊரில் தனது உறவினர் ஒருவரின் தரிசு நிலத்தை வளமாக மாற்ற முடிவு செய்தார்.
குறிஞ்சிமலரின் ஆர்வத்தை பார்த்த உறவினரும் இரண்டரை ஏக்கர் இடத்தை வழங்கினர். தற்போது இரண்டரை ஏக்கர் நிலத்தில் 1,500 தேக்கு மரக்கன்றுகளை நட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேக்கு மரத்தில் மிளகு செடிகளை ஊடுபயிராக நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய குறிஞ்சி மலர் “நான் விவசாய வேலைகளை செய்யப் போகிறேன் என்றதும் எனது பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பி.டெக் படிக்க 5 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளோம். இனி திருமணம் செய்ய வேண்டுமென்றால் நல்ல வேலை வேண்டும் எனக் கூறி முட்டுக்கட்டை போட்டனர்.
ஆனாலும் நான் அவர்களிடம் விவசாயத்தில் சாதிப்போம் எனவும் பாதுகாப்பான தொழில், விவசாயம்தான் என எடுத்துக்கூறி அனுமதி பெற்றேன்.
பின்னர் உறவினர் ஒருவரிடம் வீட்டின் அருகே உள்ள தரிசு நிலத்தை தாருங்கள் அதனை வளமாக மாற்றுகிறேன் என கூறினேன். என்னுடைய ஆர்வத்துக்கு அவர்களும் ஒத்துழைப்பு தந்தனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த மரம் சண்முகசுந்தரம் என்பவரை அணுகி, விவசாயத்தில் ஈடுபட போகிறேன் என்றதும், அவர் முழுமையான ஆலோசனைகளை எனக்கு வழங்கினார்.
இதையடுத்து இரண்டரை ஏக்கர் தரிசு நிலத்தை உழுது, அதில் பட்டம் பிரித்து 1500 தேக்குமரக்கன்றுகள் கடந்த வாரம் நட்டுள்ளோம். இந்த தேக்குமரக்கன்றுகளில் ஓராண்டு கழித்து ஊடுபயிராக மிளகு செடியை வளர்த்து பணப்பயிராக மாற்ற உள்ளோம். வரும் காலங்களில் நர்சரி தொடங்கவும், இயற்கை விவசாயத்துக்கு தேவையான பஞ்சகாவ்யம் உள்ளிட்ட உரங்களை தயாரித்து நஞ்சில்லா விவசாயத்தை கொண்டு வர வேண்டும் என்பதே தனது லட்சியம்” என்று கூறினார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி