“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவுதான் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் மருத்துவ கல்லூரில் அரசு நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றுதல், கொசுக்கள் உற்பத்தியாக கூடிய தண்ணீர் தேங்கும் பொருட்களை சுத்தம் செய்து அகற்றுதல் உள்ளிட்ட செயல்களில் மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.


Advertisement

மேலும் இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை மாணவர் சங்கம், தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இதனிடையே, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஜனவரியில் இருந்து இதுவரை 3400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் 282 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவுதான் என்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement