ரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா ! எரிபொருள் வழங்குவது நிறுத்தம்

Oil-companies-say-Air-India-not-honouring-Rs-100-crore-month-payment-promise

ஏர் இந்தியா விமானங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் வழங்கப்படாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement

Image result for air india

கடும் கடன் சுமையில் சிக்கியுள்ள அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கி வருகின்றன. இந்த 3 நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டியுள்ளது. 


Advertisement

Image result for indian oil

இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டும் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலுவையை மொத்தமாக திருப்பி செலுத்த முடியாது என்பதால், மாதம் 100 கோடி ரூபாய் வீதம் 3 நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. ஆனால் இதை முறையாக பின்பற்றாததால் வெள்ளிக்கிழமை முதல், முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement