[X] Close >

பாழடைந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு... உஷாரான போலீஸ்..!

police-seized-country-bomb-in-ramanathapuram

ராமநாதபுரம் அருகே பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பாக கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement

ராமநாதபுரம் அடுத்துள்ள வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே, பாழடைந்த ரயில் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


Advertisement

இதையடுத்து காவல்துறையின் தனிப்பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பாழடைந்த வீடு ஒன்றில் சோதனை நடத்தும்போது வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பையில் சுற்றப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு வெடிகுண்டை பாதுகாப்பாக கைப்பற்றிய போலீசார் அதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close