விஜய்யின் ’பிகிலும்’, கார்த்தியின் ’கைதி’யும் தீபாவளிக்கு வருவது உறுதியாகிவிட்டது. அன்று வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிகிலில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த ’வெறித்தனத்துக்கு’ ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்றுள்ளது.
கார்த்தி நடித்துள்ள ’கைதி’யை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ’மாநகரம்’ படத்தை இயக்கியவர். நரன், ஜார்ஜ் மரியம், ரமணா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் கார்த்திக்கு ஹீரோயின் கிடையாது. முழுக்க இரவில் படமாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு படத்துக்கும் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது தணிக்கை குழு.
இரண்டுமே தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்திருந்தாலும், ஒரே நாளில் இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் அதனால் வசூல் பாதிக்கப்படும் என்றும் வினியோகஸ்தர்கள் சிலர் கூறியுள்ளனர். தீபாவளி, ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரு படத்தை அதற்கு முன்பே வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அதை ’பிகில்’ டீம் அறிவிக்கட்டும் என்று ’கைதி’ டீமும், ’கைதி’ டீம் அறிவிக்கட்டும் என ‘பிகில்’ டீமும் காத்திருப்பதாகச் சொல்கிறது கோடம்பாக்கம்!
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்