அமேசான் நிறுவனம் ஆன்லைனில் உணவுசேவை அளிக்கும் வர்த்தகத்தை வரும் தீபாவளி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆன்லைன் அல்லது செயலி மூலம் உணவை வீட்டுக்கே கொண்டு வரும் ஏராளமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் உணவு விநியோக வர்த்தகத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கெனவே உணவு சேவை வழங்கும் நிறுவனங்களான SWIGGY, ZOMOTO போன்றவற்றை பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனம் ஆன்லைன் உணவுச் சேவையில் களம் இறங்கினால், அதிக தள்ளுபடி, கேஷ்பேக் சலுகை, உணவக உரிமையாளர்களிடமிருந்து குறைந்த கமிஷனை வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் என்பதால் மற்ற உணவுசேவை நிறுவனங்களின் வர்த்தகத்தை பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அமேசான் ஆன்லைன் உணவு விநியோகத்தை முதலில் பெங்களூருவில் தொடங்கி பின்னர் மற்ற நகரங்களில் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிகிறது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்