தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலம்- கரூர், கோயம்புத்தூர் - பொள்ளாச்சி, கோயம்புத்தூர் - பழனி இடையே 3 புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவைகளை, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்க உள்ளார். 


Advertisement

சேலம் - கரூர் மற்றும் கோவை - பொள்ளாச்சி இடையேயான பயணிகள் ரயில் சேவை, வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களுக்கு இயக்கப்பட உள்ளது. கோவையிலிருந்து பழனி செல்லும் பயணிகள் ரயிலை வாரத்தில் 7 நாள்களிலும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, புதிய பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட இருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement