சிதம்பரத்தில் இருசக்கர வாகன ஓட்டியிடம் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கஞ்சித் தொட்டி முனையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகிய 2 பேரும் அவ்வழியே குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். குழந்தைக்கு வயது என்ன? என கேட்க தொடங்கி, 2 சக்கர வாகனத்தில் 2 பேர் தான் வரவேண்டும், ஆனால் நீங்கள் 4 பேர் வந்துள்ளீர்கள் எனக் கூறி அபராதம் விதித்துள்ளனர்.
அதற்கு அந்த வாகன ஓட்டி, குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வரமுடியாது என்று பதிலளிக்கிறார். மேலும், தங்களை செல்ல அனுமதிக்கும்படி வாகன ஓட்டியின் மனைவியும் காவல்துறையினரிடம் கெஞ்சுகிறார்.
இதைப்பார்த்த தம்பதியின் குழந்தைகள் அழத் தொடங்கினர். அசல் ஆவணங்கள் கொடுத்தால் தான் உங்களை செல்ல அனுமதிப்போம் என காவல்துறையினர் கெடுபிடி காட்டுகிறார்கள். இந்தச்செயல் அவ்வழியே சென்ற பொதுமக்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது.
இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் செல்வது பரவலாக நடைமுறையில் உள்ள நிலையில், அவ்வாறு சென்ற ஒரு தம்பதியை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து அடுக்கடுக்காக கேள்விகளை கேட்ட காவல்துறையினரின் செயல் சரிதானா ? என பொதுமக்கள் வினவுகின்றனர். இது ஹெல்மெட் அணிவது தொடர்பான நடவடிக்கைகளில் பாராட்டு பெற்று வரும் காவல்துறையினர் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
Loading More post
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?