சீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி

Congress-Leader-KS-Alagiri-accept-Seeman-Challenge

இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 


Advertisement

விக்கிரவாண்டி தொகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பரப்புரை மேற்கொண்ட சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்றும், ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என்றும் பேசியிருந்தார். இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது அமைதியாக இருக்கிற சூழலை மாற்றி வன்முறையை தூண்டுவதாக சீமான் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். அதன்படி, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 153, 504 இரண்டு பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Advertisement

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய சீமான், “மக்கள் பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி போராடியுள்ளதா?. என் மீது வழக்கு போட்டால் சட்டப்படி எதிர்கொள்வேன். என்னை சிறையில் தள்ள காங்கிரஸ் கட்சி போராடுகிறது. ராஜீவ் குறித்து 28 ஆண்டுகாலமாக பேசி வருகிறேன். என்னுடன் விவாதிக்க கே.எஸ்.அழகிரி தயாரா ?. இதில் வழக்குப்பதிவு செய்‌ய ஒன்றுமில்லை; பல வழக்குகளை சந்தித்துவிட்டேன். ராஜீவ் ‌கொலை குறித்துப் பேசியதை திரும்பப்பெற போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக பதிலளித்த கே.எஸ்.அழகிரி, “சீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். தமிழர்களின் உரிமையை பாதுகாக்க இந்திய அமைதிப்படை ஈழம் சென்றது. விடுதலைப் புலிகள் தான் இந்திய அமைதிப்படை மீது தாக்குதல் நடத்தினர். விடுதலைப் புலிகளால்தான் தமிழர்களுக்கு பிரச்னை” என்று கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement