“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி

KS-Alagiri-exclusive-to-puthiyathalaimurai

சிங்கள ராணுவத்தை விட விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “ ஜனநாயக வழியில் போராடினால்தான் வெற்றி கிடைக்கும். ஆயுத போராட்டங்கள் வென்றாலும் நிலைக்காது. தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் பிரபாகரன் தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழக மக்களை காக்கத்தான் அமைதிப் படை அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற போராட்டக்குழுக்களை பிரபாகரன் எதிர்த்தார்” எனக் கூறியுள்ளார்


Advertisement

முன்னதாக, ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் எழுந்தது. இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரசார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும், ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய தலைமுறைக்கு தெரிவித்தார். இந்நிலையில் சிங்கள ராணுவத்தை விட விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement