நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகயுள்ள "பிகில்" படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், 1 மில்லியன் லைக்குகளையும் இந்த பிகில் படத்தின் டிரைலர் யூடியூபில் பெற்றுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘பிகில்’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் பட்டய கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான பின்னணி இசைதான்.
படத்தில் அதிரடியாக சண்டை காட்சிகள் இருக்கும் என்பது டிரைலக் பார்த்தாலே தெரிகிறது. ட்ரெய்லரில், ‘இந்த விளையாட்டால் தான் உங்க அடையாளமே மாறப்போகுது’, ‘எங்களுக்கு புட்பால்லாம் தெரியாது எங்க ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்’ போன்ற சார்ப்பான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. கால்பந்து வீரராக, பயிற்சியாளராக இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்தில் சற்றே அதிரடியாகவும் விஜய் காட்சி அளிக்கின்றார்.
மேலும் பிகில் படத்தின் ட்ரெய்லர் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். முக்கியமாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தன்னுடைய ட்விட்டரில், ‘படம் சிறப்பான ஒன்றாக அமைய நண்பர்கள் அட்லி, விஜய் மற்றும் ஏர்.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துகள். சக் தே இந்தியா படம் போல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'