உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் மேரி கோம் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 


Advertisement

உலக மகளிர் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் ரஷ்யாவின் உலான்-உடே (Ulan-Ude) -வில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின், மேரி கோம் பங்கேற்றுள்ளார். இந்தத் தொடரின் கால் இறுதிப் போட்டியில்
கொலம்பியாவின் வெலன்சியா விக்டோரியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தார். அரையிறுதியில் துருக்கியின் பஸனாஸ் ககிரோகுலுவுடன் நேற்று மோதினார். இதில் 1-4 என்ற கணக்கில் தோற்றதை அடுத்து, மேரி கோம்-க்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.


Advertisement

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் பெறவிருக்கும் 8ஆவது பதக்கம் இது. இதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.  ஏற்கெனவே 6 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement