30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜியோவில் ரிசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதன்முறை 30 நிமிடம் இலவாச் ‘டாக் டைம்’ தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. ஜியோவில் போன்கால்கள் இனி இலவசம் கிடையாது என்பதுதான் அந்த அறிவிப்பு. இனி ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு ஈடாக இணைய சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் ஜியோவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Advertisement

இது ஒரு புறம் இருக்க, ஜியோவின் இந்த அறிவிப்பு அதன் போட்டியாளர்களாக வோடோஃபோன் - ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஜியோ அறிவிப்பின் எதிரொலியால் வோடோஃபோன், ஏர்டெல், ஐடியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில் கட்டண அறிவிப்பால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்களை கவர புதிய அறிவிப்பை ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி, ஜியோவில் ரீசார்ச் செய்யும் வாடிக்கையாளர்கள் முதன்முறை 30 நிமிடம் இலவசமாக போன் கால் பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ரீசர்ச் செய்து முதல் 7 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் 6 பைசா கட்டண வசூலிப்பு ஜனவரி 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement