பயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்

farmers-protest-in-thiruvarur

திருவாரூரில் பயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 150 விவசாயிகள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Advertisement

2018 மற்றும் 19 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்குவதில் திருவாரூர் மாவட்டத்தில் 164 வருவாய் கிராமங்கள் விடுபட்டுள்ளதை கண்டித்தும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

காவல்துறை முன் அனுமதியின்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி இரண்டு பிரிவின் கீழ் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பிஆர் பாண்டியன், வரதராஜன், சுப்பையன் உள்ளிட்ட 150 விவசாயிகள் மீது திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement