சீன அதிபர் ஸி ஜின்பிங் உடன் மாமல்லபுரத்தில் பேச்சு நடத்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். மோடியை ஆளுநர் பல்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சால்வை அணிவித்து ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பிரேமலதா, ஜி.கே. வாசன் உள்ளிடோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடிக்கு செண்டைமேள தாளங்கள் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கோவளம் புறப்பட்டார். திருவிடத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து காரில் கோவளம் செல்கிறார்.
Loading More post
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி