“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாக ‘தலைவி’ படத்தில் நடித்துவரும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 


Advertisement

ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தை ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 


Advertisement

இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கங்கனா ரனாவத், “ எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நடுத்தர குடும்பத்தில் இருந்து 16 வயதில் சினிமாவிற்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஜெயலலிதா முதலமைச்சராகும் வரையிலான காட்சிகள் தலைவி படத்தில் இடம்பெற்றிருக்கும்” எனத் தெரிவித்தார்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement