வளிமண்டலத்தை தாண்டிப் பறந்த முதல் ஏவுகனை...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பேரழிவைக் கொடுத்த உலக யுத்தங்கள் தான் பல கண்டுபிடிப்புகளுக்கும் உந்துதலாக அமைந்தது. இன்று உலக நாடுகள் பயன்படுத்தும் பெரும்பாலான ஆயுதங்கள் யுத்த நெருக்கடி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான். கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணைகள் பல இன்று அனைத்து உலக நாடுகளிடமும்  உள்ளது. ஆனால் முதன் முதலில் வளிமண்டலத்தை தாண்டி பயணித்து இலக்கை தாக்கிய ஏவுகணை ஜெர்மன் படையின் வி.1. இதை பறக்கும் வெடிகுண்டு என அழைத்தனர்.


Advertisement

ஜெர்மனியானது இரண்டாம் உலக யுத்தத்தில் தனது படை பலத்தை மட்டும் நம்பியிருக்கவில்லை மாறாக அது மனித உயிர்களைக் கொல்ல வித விதமான அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் கவனம் செலுத்தியது. அதில் ஒன்று தான் வி-1 எனும் பறக்கும்வெடி குண்டு. இதனை ஜெர்மனி “Vengeance weapon” என அழைத்தது அதன் சுருக்கம் தான் வி-1.


Advertisement

இப்புகைபடம் வி-1 ரக ஏவுகணையொன்று 1945ல் மத்திய லண்டனை தாக்க பறந்த போது எடுக்கப்பட்டது. வி-1 ரக ஏவுகணையானது மணிக்கு 350 மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது சுமார் 250 கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.

ஜெர்மனியின் இந்த ஆச்சர்யத் தாக்குதல், அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு பெரும் சவாலாக இருந்தது. பிரிண்டன் அதிகாரி டானிஸ் நாவல் என்பவர் வி-1’ஐ புகைப்படம் பிடித்து அப்புகை படத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர் தாக்குதலுக்காக ஒரு ஏவுகணையை தயார் செய்தார். ஆனால் அது தன் முதல் சோதனையிலேயே ஜெர்மனிக்கும் ஸீவீடனுக்கும் இடையே விழுந்து நொறுங்கியது.


Advertisement

கிட்டத்தட்ட படத்தில் இருப்பது போல 30,000 வி-1 பறக்கும் வெடிகுண்டுகளை தயாரித்து தாக்குதலுக்கு பயன்படுத்தியது நாஜி ஜெர்மன். இதனால் இரண்டாம் உலகயுத்தத்தில் சுமார் 6200 பேர் கொல்லப்பட்டனர். 18,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர். ஜெர்மனி உலக யுத்தத்தில் அசுர பலம் காட்டியதற்கு பின் இப்படி மனிதர்களுக்கு எதிரான பல அறிவியல் கண்டுபிடிப்புகள் சிதறிக் கிடக்கின்றன. அன்று முதல் இன்று ரஃபேல் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஏவுகனைகள்  வரை பல்வேறு ஏவுகனை வடிவமைப்பிற்கு முன்னோடியாக இருந்தது இந்த வி-1 பறக்கும் வெடிகுண்டு தான்.

loading...

Advertisement

Advertisement

Advertisement