கன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நவராத்திரியை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாலும், 4 கிலோ தங்க கட்டிகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


Advertisement

இந்தியா முழுவதும் இன்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல கோயில்களில் கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர். விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இங்கு அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம் பிரபலம். 


Advertisement

அதன்படி இந்த வருடம் நவராத்திரியை முன்னிட்டு, கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாலும், 4 கிலோ தங்க கட்டிகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்தச் சிறப்பு அலங்காரத்தை திரளான பக்தர்கள் தரிசித்து கன்னிகா பரமேஸ்வரியை வழிபட்டனர். 

கடந்த ஆண்டு இந்தக் கோயிலில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement