ஏமாற்றி விளையாடினால் 10 வருடம் முடக்கப்படுவீர்கள் - பப்ஜி 

PUBG-Mobile--If-you-cheat--your-ID-will-be-banned-for-10-years

குறுக்கு வழியில் பப்ஜி விளையாட்டை விளையாடினால் சம்பந்தப்பட்ட கணக்கு 10 வருடங்களுக்கு முடக்கப்படும் என பப்ஜி விளையாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது


Advertisement

அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம் வந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும். சமீபத்தில் அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது பப்ஜி என்ற மொபைல் விளையாட்டு. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டை விரும்பி விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 


Advertisement

பப்ஜி விளையாட்டுக்கு அமோக வரவேற்பு இருப்பதால் அந்த விளையாட்டில் எளிதாக வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழிகளையும் சில மூன்றாம் தர செயலிகள் கொடுத்து வருகின்றன. அவற்றை பயன்படுத்தி பலரும் பப்ஜி விளையாட்டை விளையாடி வருவதாக தொடர் புகார்கள் எழும்பியது. இதனை அடுத்து குறுக்கு வழியில் பப்ஜி விளையாட்டை விளையாடினால் சம்பந்தப்பட்ட கணக்கு 10 வருடங்களுக்கு முடக்கப்படும் என பப்ஜி விளையாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனம், 

பப்ஜி விளையாடும் ஒவ்வொருவருக்கும் நியாயமான மற்றும் சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு சூழலை வழங்கவே நாங்கள் முயற்சி செய்கிறோம். குறுக்கு வழியில் விளையாட்டு என்ற பிரச்சினையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்; எனவே, விதியை மீறும் ஒவ்வொரு கணக்கும் 10 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. குறுக்கு வழியில் விளையாடியதால் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை பப்ஜி தடை செய்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement