[X] Close

உலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய வீரர் அஸ்வின் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்ய உள்ளார். 


Advertisement

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால், 215 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீன் எல்கர் 160 ரன்களும் குயின்டன் டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Advertisement

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி ரோகித் ஷர்மாவின் சதத்தால் 323 ரன்கள் எடுத்தது. ரோகித் ஷர்மா 127 ரன்களும், புஜாரா 81 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணியின் டீன் எல்கர் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர இறுதியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்திருந்தது. 

இந்நிலையில் நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் ஒரு விக்கெட் எடுக்கும் பட்சத்தில் அவர் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்ய உள்ளார். அதாவது இதுவரை அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நாளை அவர் ஒரு விக்கெட் எடுத்தால் அதிவேகமாக 350 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை முரளிதரனுடன் பகிர்ந்து கொள்வார். 


Advertisement

இலங்கை வீரர் முரளிதரன் இந்தச் சாதனையை 66 டெஸ்ட் போட்டிகளில் படைத்திருந்தார். அஸ்வின் தற்போது தனது 66ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். ஆகவே இவரும் அதே போட்டிகளில் 350 விக்கெட்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். அத்துடன் இவர் அதிவேகமாக 350 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைப்பார். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் 350ஆவது விக்கெட்டை வீழ்த்தியிருந்து சாதனையாக இருந்தது. அஸ்வின் இதனையும் முறியடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement