“குக்கரில் சமைத்தால் இதய நோய்” - ஸ்டான்லி மருத்துவர் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குக்கரில் அரிசி,பருப்பு காய்கறிகள் சமைப்பதை நிறுத்தினால் இதய நோய்கள் வருவதை தடுக்கலாம் என்று மருத்துவர் கே. கண்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

உலக இதய தினம் நாளையொட்டி இதய நோய்கள் தொடர்பான விழிப்புணர்வை அளிக்க சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் நேற்று ஒரு பேரணி நடத்தப்பட்டது. இதில் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் இதய நோய் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களையும் அவர்கள் பாதகைகளாக பிடித்து நடந்தனர். 


Advertisement

இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையின் இதய இயல் துறையின் மருத்துவர் கே.கண்ணன் இதய நோய்கள் குறித்து உரையாற்றினார். அதில்,“இந்தியாவில் தற்போது இதய நோய்கள் அதிகரித்துள்ளது. தற்போது இந்திய மக்கள் 100 பேரில் 11 பேருக்கு இதய நோய் வந்துவிடுகிறது. அதேபோல இந்தியர்கள் மத்திய சர்க்கரை நோயும் அதிகரித்துள்ளது. இவ்வாறு நோய்கள் அதிகரிக்க காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறையே காரணம். ஏனென்றால் மக்கள் சரியான உணவு பழக்கும், உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பதில்லை. 

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதய நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும் இவை வராமல் தடுக்க நாம் முதலில் குக்கரில் அரிசி, காய்கறிகள், பருப்பு ஆகியவற்றை சமைத்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். குக்கர் வருவதற்கு முன்பு எப்படி அரிசியை வடித்து சாதமாக சாப்பிட்டோமா அதேபோல தற்போது சாப்பிடவேண்டும். அதேபோல இரவு நேரத்தில் சாதம் சாப்பிடுவதையும் மக்கள் தவிர்க்கவேண்டும். இதய நோய்க்கு முக்கிய அறிகுறிகள் நெஞ்சு வலி மற்றும் அதிகமாக மூச்சு வாங்குதல் ஆகியவை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement