'விஜய் 64' படத்தில் இணைந்துள்ள விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் தற்போதைய திரைப்படங்கள் வரும் தீபாவளிக்கு மோதிக்கொள்கின்றன.
பண்டிகை நாட்கள் என்றாலே திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த விழா காலங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்து விடும். இப்படி வெளியாகும் திரைப்படங்களினால் நடிகர்கள் மட்டுமின்றி அவர்களது ரசிகர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவர்.
அதற்காகவே பண்டிகை நாட்களில் திரைப்படத்தை வெளியிட திரையுலகினர் முனைப்பு காட்டுவர். ஆனால் இந்த நிலை, கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தலைகீழாக மாறியது. விழாக்காலங்களில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. அத்திபூத்தாற் போல முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும். ஆனால், கடந்த பொங்கல் அன்று ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், ஆகிய படங்கள் வெளியாகி பழைய நடைமுறையை மீட்டெடுத்தன.
அந்த வகையில், வரும் தீபாவளிக்கு 3 முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. விஜய் நடித்துள்ள‘பிகில்’,விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’,கார்த்தியின் ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்திலுள்ள மொத்தம் ஆயிரத்து 100 திரையரங்குகளில், விஜய் படத்திற்கு 500 திரையரங்குகளும், கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி படங்களுக்கு தலா 300 திரையங்குகளும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்கு வெளியாக உள்ள மூன்று படங்களின் கலைஞர்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். அதாவது ‘பிகில்’ படத்தின் நாயகன் விஜய், ‘சங்கத்தமிழன்’ ஹீரோ விஜய் சேதுபதி மற்றும் ‘கைதி’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் 'விஜய் 64' படத்திற்காக இணைந்துள்ளனர். அந்தப் படத்தின் சூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. எது எப்படியோ அடுத்த படத்தில் இணைந்து வேலை செய்யும் இந்த மூவரூம் தீபாவளிக்கு மோதிக்கொள்கின்றனர்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!