டெல்லியில் உள்ள துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையம் ஒன்றில் அஜித் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன
நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கு ரெடியாகி விட்டார் அஜீத். ’தல 60’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ’நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். அந்தப் படத்தை தயாரித்த, போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் சால்ட் அன் பெப்பர் லுக்கில் இருந்து முழுவதும் மாறி இளமையான அஜித்தின் போட்டோ நேற்று சமூக வலைதளங்களில் பரவின. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்தனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள டாக்டர்.கர்னிசிங் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையம் ஒன்றில் அஜித் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன.
பயிற்சி மையத்தில் இருப்பவர்களுடன் நடிகர் அஜித்குமார் ஆலோசனை செய்வது போலவும், பயிற்சி மையத்தில் வாசலில் அவர் நிற்பதும் போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் நடிகர் அஜித், கோவையில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!