[X] Close >

கிருஷ்ணகிரியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

Heavy-Rain-in-Krishnagiri---Public-Happy

கிருஷ்ணகிரியில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொட்டிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர்நிலைகள் நிரம்பவில்லை. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மழை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் மேல்அடுக்கு சூழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்தது. 


Advertisement

இதைத்தொடர்ந்து இன்று மாலை திடீரென கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களில் இடி, மின்னலுடன் கூடிய பரவலான கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பழையபேட்டை சாலை, ரவுண்டானா சந்திப்பு, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சோமர் போட்டை போன்ற இடங்களின் சாலைகளில் மழைநீர் இரண்டு அடி உயரத்திற்கு ஓடியது. இதனால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close