‘அஸ்வினை நீக்கியதற்கு என்ன காரணம்?’ - கவாஸ்கர் காட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அஸ்வினை இந்திய அணியிலிருந்து நீக்கியதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிக்க அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 
இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தற்போது வரை 8 விக்கெட்கள் இழப்பிற்கு 379 ரன்கள் அடித்துள்ளது. 


Advertisement

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவிசந்திரன் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் ஆட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மூன்றாம் நாளான இன்று மேலும் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை அஸ்வின் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கமெண்டரியிலிருந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அஸ்வின் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், “இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் கண்டிப்பாக விளையாட வேண்டும். அவர் அணியிலிருந்து வேறு சில காரணங்களுக்காக நீக்கப்படுவது அவரின் ஆட்டத்தை பாதிக்கிறது. ஏனென்றால் அவருக்கு மற்ற வீரர்களிடம் நல்ல ஆதரவு வந்தால் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். அவர் சில நேரங்களில் சரியாக பந்துவீசாததற்கு இதுவே காரணம். 


Advertisement

அஸ்வினிற்கு மற்ற வீரர்களிடம் இருந்து ஆதரவை உணர்ந்தால் சிறப்பாக செயல்படுவார். அவரை அடிக்கடி அணியிலிருந்து நீக்குவது அவரை சற்று அதிகம் முயற்சி செய்ய வைக்கும். அப்போது அவர் தனது வழக்கமான முறையை விட்டு சற்று கூடுதலாக செய்ய முயற்சி செய்வார். அவர் சில நேரங்களில் தேவையில்லாத ஒப்பீட்டால் பாதிக்கப்படுகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது அவர் நாதன் லையனுடன் ஒப்பிடப் படுகிறார். 

அதேபோல இங்கிலாந்தில் விளையாடும் போது மொயின் அலியுடன் அஸ்வின் ஒப்பிடப் படுகிறார். மேலும் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு அவரின் ஆட்டத்தை தவிர வேறு சில காரணங்களும் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்தியவரை அணியிலிருந்து அடிக்கடி அணியிலிருந்து நீக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement