வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது?

Home-and-car-Loan-interest-may-decrease-

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-ஆவது முறை வட்டிக் குறைப்பு இதுவாகும். இதனால், வீடு வாகனக் கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது.


Advertisement

மும்பையி‌ல் நடைபெற்ற ரிசர்வ் வ‌ங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்ட முடிவில் வட்டிக்குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கிகளின் குறுகிய காலக் கடன் வட்டி விகிதமான ரெப்போ 5.40 சதவிகிதமாக உள்ள நிலையில், அது 5.15 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நான்கு நிதிக்கொள்கை கூட்டங்களிலும் மொத்தம் 1.15 சதவிகிதம் கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.


Advertisement

நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதமாக இருக்கும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6.1 சதவிகிதமாக குறைத்து ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் தொடர்ந்து கடன் வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளது.

10 மாதங்களில் மொத்தமாக 1.35 சதவிகிதம் வட்டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது. கடன் வட்டி குறைக்கப்பட்டால், தொழில் துறை, கட்டுமானத் துறைகள் வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய அரசு கருதுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement