’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது? இயக்குனர் புது தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனுஷ் நடித்துள்ள ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார்.


Advertisement

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், படம் இரண்டு வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்து வருகிறது.


Advertisement

இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய ட்டைலரை வெளியிட்ட படக்குழு, படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை எதிர்நோக்கி பதிவுகளையும் மீம்ஸ்களையும் பதிவிட்டனர். இந்நிலையில் படத்தின் மீதான பிரச்னை தீர்க்கப்படாததால், படம் அன்று ரிலீஸ் ஆகவில்லை. இதனால் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் அன்று ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அறி வித்துள்ளார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், நவம்பர் 15 ஆம் தேதி படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement