திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடித்தது 8 பேர் கொண்ட கும்பல் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
லலிதா ஜுவல்லரியின் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒருவரான மணிகண்டன் திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தில் சிக்கினார். அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ் தப்பிவிட்டார். இதையடுத்து ரகசிய இடத்தில் மணிகண்டனிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவந்திருப்பதாக தெரிகிறது.
குறிப்பாக இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது 8 பேர் கும்பல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தப்பியோடிய சுரேஷ் என்பவரின் தாயார் கனகவல்லி மற்றும் குணா, ரவி, மாரியப்பன் உள்பட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரேஷ் பிரபல வங்கிக் கொள்ளையன் முருகனின் உறவினராவார். எனவே முருகன் தலைமையிலான கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்