திருச்சியில் நகைக் கடையில் கொள்ளையர்கள் திருடியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரில் துளையிட்டு கொள்ளை அடித்தது வடமாநிலக் கொள்ளையர்கள்தான் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரிக்குள் பொம்மை முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.
7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் விசாரணை மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருநாள்களில் கொள்ளையர்களை கைது செய்து விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நகைக் கடையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த போது பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில், முகமூடி அணிந்திருந்த கொள்ளையன் ஒருவன் ஒவ்வொரு நகையாக எடுத்து பேக்கில் வைப்பது போல் உள்ளது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்