ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - நடத்து‌நர் மீது புகார் 

young-girl-complaint-against-bus-conductor

சென்னையிலிருந்து மன்னார்குடி சென்ற அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்துள்ளது. 


Advertisement

சென்னையைச் சேர்ந்த ஒரு பெண், கோ‌யம்பேட்டிலிருந்து மன்னார்குடி செல்லும் இரவு நேரப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது, நள்ளிரவில் அந்தப்பெண் தூங்கிக்கொண்டிருந்த போது, பேருந்து நடத்துநர் ராஜூ, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளம் பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 


Advertisement

ஓடும் பேருந்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக‌ ஏற்கனவே நடத்துநர் ராஜூ மீது புகார்கள் இருந்ததும், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்ந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த பெண் அளித்த புகார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement