மசாஜ் செண்டரில் பட்டாக்கத்தியுடன் கொள்ளை - சிசிடிவி காட்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள மசாஜ் சென்டரில் நான்கைந்து இளைஞர்கள் கத்திமுனையில் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலை ஏகாட்டூர் என்ற பகுதியில் சைன் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. கடந்த 28ஆம் தேதி அன்று ஐந்து இளம் வாலிபர்கள் மசாஜ் செண்டர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர். அத்துடன் அவர்களை தாக்கி பணம், செல்போன்கள், நகைகள் உள்ளிட்டவைகளை பறித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த முதல் நிலை காவலர்கள் ரமேஷ், ராஜேஷ் ஆகியோர் வழிப்பறி செய்ய வந்த 5 வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். 


Advertisement

அதில் விஜய் பிரபாகரன், அஜய், சசிகுமார், ஜெகதீசன் ஆகிய நான்கு வாலிபர்களை கைது செய்தனர். வினோத் என்ற நபர் தப்பி ஓடிவிட்டார். அவரைத் தேடும் பணியில் கேளம்பாக்கம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் பட்டாக்கத்தியுடன் 5 வாலிபர்கள்  பெண்களை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்க முயன்றது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement