JUST IN

Advertisement

பகவதி அம்மன் கோயிலுக்குள் மகாத்மா காந்திக்கு அனுமதி மறுப்பு... அப்போது நடந்தது என்ன..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாத்மா காந்தி ‌மூன்று முறை கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள பகவதி அம்மன் கோயிலுக்குள் செல்ல அவருக்கு இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறை வந்த‌ போது காந்திக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Advertisement

காந்தியடிகள் 1925-ஆம் மார்ச் மாதம் 14-ஆம் தேதி முதன் முதலாக நாட்டின் தெற்கு முனையான ‌கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். சுதந்திரத்திற்கான போராட்டத்துடன், சாதிய பாகுபாடு இருக்கக்கூடா‌து‌ என்றும் காந்தி தீரத்துடன் போராடிய காலகட்டம் அது. மூன்று கடல் சங்கமிக்கும் பகுதியில் நின்று அதன் அழகை ரசித்த காந்தி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றார். ஆனால் அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.


Advertisement

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வைக்கம் என்ற இடத்தில் கோயிலுக்கு செல்லும் சாலையை, பட்டியல் இன மக்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட‌தே அதற்கு காரணம். அதே போல், 1934-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி இரண்டாவது முறையாக காந்தியடிகள் கன்னியாகுமரி வந்த போதும், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காந்தியடிகள் மிகவும் மன வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 1937-ஆம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர், ஆலய பிரவேச சட்டத்தை பிரகடனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தந்த காந்திக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலில் பூஜை செய்பவர்கள் செல்லும் பகுதி வரை சென்று காந்தியடிகள் அம்மனை தரிசனம் செய்தார்.


Advertisement

கன்னியாகுமரியை காந்தியடிகள் மிகவும் நேசித்தார் என்றே கூறலாம். காந்தி இறந்த பிறகு அவரது அஸ்தி 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கன்னியாகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது. அதன்பிறகு அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் 1956-ஆம் ஆண்டு நினைவு மண்டபத்தை கட்டினார். காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி சூரிய ஒளி அங்கு வைக்கப்பட்டுள்ள அஸ்தியின் மீது விழும்படி கட்டப்பட்டதே காந்தி மண்டபத்தின் சிறப்பு. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கன்னியாகுமரிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement